முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் குருதிக்கொடை

ஜனநாயக போராளிகள் கட்சியின் நிதிப் பங்களிப்பில் வடமராட்சி கிழக்கு
இளைஞர்களின் ஏற்பாட்டில் இரண்டாவது தடைவையாக மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு இன்றைய தினம் நாகர்கோவில் குருகுலம் சனசமூக நிலையத்தில்
இடம்பெற்றது.

இவ்குருதி நன்கொடை நிகழ்வில் ஆரம்பத்தில் மாவீரர்களுக்கு நினைவேந்தல்
செய்யப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ் குருதி நன்கொடை நிகழ்வில் பங்குகொண்ட குருதி நன்கொடையாளருக்கு நன்கொடையாளர்களுக்குமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் குருதிக்கொடை | Maaveerar Naal 2025 In Nelliady

முதலாம் இணைப்பு

கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையில், மாவீரர்களின் நினைவினை போற்றும்
நிகழ்வு அமைதியான சூழலில் இடம்பெற்றது.

சபையின் உதவிசாளர் தயாபரன் தலைமையில் இன்று காலை நடந்த நினைவஞ்சலி நிகழ்வில் பலர் கலந்து கொண்டு தங்கள் மரியாதைகளை செலுத்தினர்.

நிகழ்வுக்குப் பின்
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த உபதவிசாளர், வரவிருக்கும் மாவீரர் தினத்தை
முன்னிட்டு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்தார்.

நினைவஞ்சலி

இந்த மாதம் 27ஆம் திகதி மதிய
வேளையின் பின்னர் நெல்லியடி வர்த்தகர்கள் தங்களது கடைகள் மற்றும் வர்த்தக
நிலையங்களை மூடி, நினைவேந்தலில் பங்கேற்கும் சூழலை உருவாக்குமாறு அன்புடன்
வேண்டுகிறேன்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் குருதிக்கொடை | Maaveerar Naal 2025 In Nelliady

இது எங்கள் சமூகத்தின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் தருணம் என்று அவர்
கூறினார்.

பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.  

உடுத்துறை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்
ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வாரத்தின் ஐந்தாவது நாள்
நினைவஞ்சலி இடம்பெற்றது.

இன்றைய மாவீரர் வார ஐந்தாவது நாள் நினைவஞ்சலி நிகழ்வில் மாவீரர்களின்
பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி
செலுத்தினர். 

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் குருதிக்கொடை | Maaveerar Naal 2025 In Nelliady

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் குருதிக்கொடை | Maaveerar Naal 2025 In Nelliady

செய்தி  – லின்ரன்

வடமராட்சி கிழக்கு 

மேலும், மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு வடமராட்சி கிழக்கு
மருதங்கேணியில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்
மதிப்பளிக்ப்பட்டனர்.

மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு ஓழுங்கமைக்கப்பட்ட
மண்டபத்தில் இரு மாவீரர்களன் தந்தை ஒருவரால் சுடரேற்றப்பட்டு நிகழ்வு
ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் குருதிக்கொடை | Maaveerar Naal 2025 In Nelliady

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் குருதிக்கொடை | Maaveerar Naal 2025 In Nelliady

செய்தி – எரிமலை

சாவகச்சேரி நகரசபை

யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும்
உரித்துடையோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு யாழ். சாவகச்சேரி நகரசபை பொன்
விழா மண்டபத்தில் நேற்று(24) நடைபெற்றது.

போராளிகள் நலன்புரிச்சங்கமும் தென்மராட்சி மாவீரர் நாள் எழுச்சி ஏற்பாட்டு
குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன் நிகழ்வில் மாவீரர்களின் 35 பெற்றோர்கள்
மற்றும் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் குருதிக்கொடை | Maaveerar Naal 2025 In Nelliady

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் குருதிக்கொடை | Maaveerar Naal 2025 In Nelliady

செய்தி – தீபன்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்