முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசியல் பழிவாங்கல்களுக்காக பயன்படுத்தப்படும் சிஐடி : முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

குற்றப்புலனாய்வு திணைக்களமானது (CID) அரசியல் பழிவாங்கல்களுக்காக அரசாங்கத்தால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe) தெரிவித்தார்.

இது நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட அவரது சொகுசு கார் நேற்று (25) கோட்டை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விடுவிக்கப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காவல்துறையினர் செயற்பட்ட விதம்

அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஜனாதிபதி உட்பட அரசாங்கம் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பு கூற வேண்டும். காவல்துறையினர் செயற்பட்ட விதம் தொடர்பில் என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

அரசியல் பழிவாங்கல்களுக்காக பயன்படுத்தப்படும் சிஐடி : முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு | Cid Being Used For Political Vendettas Sujeewa

தேர்தலுக்கு 10 நாட்கள் இருக்கும் போது இந்த செய்தியைப் பிரசித்தப்படுத்தினர். என்னை சிக்க வைப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட முயற்சிக்கு 100 இலட்சமாவது செலவு ஏற்பட்டிருக்கும்.

தொடர்ச்சியாக இவ்வாறான நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டால் இந்த நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் அற்றுப்போகும். நாம் நியாயமான அரசியலிலேயே ஈடுபடுவோம்.

எனக்கு இழைக்கப்பட்ட அநீதி

எமது விமர்சனங்கள் அரசியல் ரீதியானவையாக இருக்குமே தவிர தனிப்பட்ட ரீதியிலானதாக இருக்காது. ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக எனது அரசியல் பயணத்தை அரசாங்கத்தால் தடுக்க முடியாது.

அரசியல் பழிவாங்கல்களுக்காக பயன்படுத்தப்படும் சிஐடி : முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு | Cid Being Used For Political Vendettas Sujeewa

எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன். பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், பதவி உயர்வுகளுக்காகவும் எந்தவொரு அதிகாரியும் இவ்வாறு செயற்படக் கூடாது.

அரசியல் பழிவாங்கலுக்காக முன்னெடுக்கப்பட்ட மிகவும் மோசமான செயல் இதுவாகும். அரசியல் பழிவாங்கல்களுக்கு இவ்வாறு சிஐடி பயன்படுத்திக் கொள்ளப்பட்டால் அது நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.