முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஸ்வெசும கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சித் தகவல்

புதிய இணைப்பு

நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் பயனடையும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் மாதாந்த கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயத்தினை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இன்று (03) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அதன்படி, எட்டு இலட்சம் பேருக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த 8,500 ரூபா நிவாரணக் கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை

அத்துடன் மிகவும் வறிய நிலையில் உள்ள நான்கு இலட்சம் மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்த 15,000 ரூபா கொடுப்பனவு 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சித் தகவல் | Issue Aswesuma Allowance For Low Income Families

மேலும் எட்டு இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் 2025 மார்ச் 31 வரையிலும், மற்றொரு குழுக்களுக்கான கொடுப்பனவு 2024 டிசம்பர் 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

அடுத்த பாடசாலை தவணையில் இருந்து இந்த முடிவு நடைமுறைக்கு வரும் எனவும் பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு நேற்று (02) அனுமதி கிடைத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முதலாம் இணைப்பு 

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவு தொடர்பாக முன்னாள் அரசாங்கம் கடைப்பிடித்த வினைத்திறன் இல்லாத நடைமுறையையே தற்போதைய அரசாங்கமும் கடைப்பிடித்து வருவதாகக் கிராம சேவகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக அந்தச் சங்கத்தினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அஸ்வெசும கொடுப்பனவுக்கான பயனாளிகள் தெரிவின்போது, பிழையில்லாத பொறிமுறை ஒன்றைப் பின்பற்றுமாறு அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்

அஸ்வெசும கொடுப்பனவு சம்பந்தமான செயற்பாடுகளிலிருந்து கடந்த மே மாதம் 7ம் திகதிக்குப் பின்னர் கிராம சேவகர்கள் விலகிக் கொண்ட நிலையில்  அந்தப் பணிகள் தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஸ்வெசும கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சித் தகவல் | Issue Aswesuma Allowance For Low Income Families

இதேவேளை, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் நாடளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதேச செயலகத்திற்கு முன் குவிந்த மக்கள்

மேலும், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைப் பதிவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைக் கையளிப்பதற்கும், நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அதிகளவான மக்கள் நுவரெலியா (Nuwaraeliya) பிரதேச சபை செயலகத்திற்கு முன்பாக கூடியிருந்தனர். 

அஸ்வெசும கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சித் தகவல் | Issue Aswesuma Allowance For Low Income Families

இதனிடையே, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு கிடைக்கப் பெறாத குடும்பங்கள் அல்லது தனிநபர் தங்களது குறைகளை அறிவிப்பதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.