வலி வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை
பிரதான வீதியில் இருந்து செல்லும் கிளை வீதியான கோணப்புலம் என்ற ஒழுங்கையில்
இலங்கை மின்சார சபையினர் அனுமதி பெறாமல், அடாத்தாக மின்கம்பங்களை நாட்டியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இது குறித்து அந்த மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இந்த வீதியின் மொத்த நீளம் 725 மீட்டர்கள். காங்கேசன்துறை வீதியில் உள்ள மின்
கம்பத்தில் இருந்து இந்த வீதியினூடாக உயர் மின்னழுத்த மின்சாரத்தினை
பெறுவதற்காக தனியார் நிறுவனம் ஒன்று முயற்சித்தது.
உயர் மின்னழுத்த மின் கம்பங்கள்
இந்த வீதி மிகவும்
ஒடுக்கமானது. அதாவது வீதியானது ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு அளவு என்ற
வகையில் 15,16,17 அடிகள் அகலமாகவே உள்ளது.
அத்துடன் இந்த வீதி 3,4
வளைவுகளையும் கொண்டது.
இவ்வாறு உயர் மின்னழுத்த மின் கம்பங்களை நாட்டுவதால் போக்குவரத்துத்துக்கு
இடையூறு, வீதி ஓரங்களில் உள்ள பயன்தரும் மரங்களுக்கு பாதிப்பு, கட்டடங்கள்
கட்டுவதில் சிக்கல் போன்ற விடயங்களை நாங்கள் மின்சார சபைக்கு
சுட்டிக்காட்டினோம்.
அதற்கு மின்சார சபையானது, இது குறித்து பிரதேச சபையிடம்
முறையிடுமாறு கூறியது.
அதன் அடிப்படையில் 15ற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களாகிய நாங்கள் பிரதேச
சபையிடம் எழுத்து மூலமான ஆவணம் மூலம் முறையிட்ட வேளை, பிரதேச சபையினர், தமது
கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால் மக்களுடன் கலந்துரையாடி முடிவினை
எடுக்கும் படி இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தினர்.
ஆனால் மின்சார சபை
இதைப்பற்றி பொருட்படுத்தவில்லை” என தெரிவித்துள்ளனர்.