இலங்கைத் தமிழர்களின் அரசியல் கோட்டையாக கருதப்பட்டுவந்த வடக்கை அநுர அலை சரித்ததாகவும், தமிழ் தேசியத்தின் எதிர்கால நிலை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாகவும் அண்மைக்காலங்களில் சில அரசியல் கருத்துக்கள் மேலோங்கியிருந்தன.
எனினும் நடந்துமுடிந்த மாவீரர் தின நிகழ்வானது இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், ”தமிழ் தேசியம் தொடர்பிலான கருத்துக்கள் அண்மைக்கால அரசியலின் பேசுபொருளாகியது.
ஆனால் தமிழ் தேசியம் என்றால் என்ன என்பதை நடந்து முடிந்த மாவீரர் தினம் தெளிவாக கூறியது.
எனினும் தற்போது தமிழ் தேசியம் அதற்கான சரியான தலைமைத்துவத்திற்காக காத்திருக்கின்றது.” என சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,