நாம் வாழும் பூமி பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன.அந்த வகையில், பூமியின் மையத்தில் எந்த நாடு உள்ளது என்பது பற்றி ஒரு நாளாவது யோசித்து பார்த்து இருகின்றீர்களா?
இல்லை என்றால், அது பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். கானா (Ghana) நாடு பூமியின் மையத்திலிருந்து 380 மைல் தொலைவில் உள்ளதாக வானியலாளர்கள் கூறுகின்றார்கள்
பூமியின் மையத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean) உள்ளது. அதற்கு அருகில் கானா தகோராடி எனும் நகரம் உள்ளது. கானா ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாகும்.
பூமியின் மையம்
மற்றைய நாடுகளை விட இங்கு அதிக வெப்பம் இருக்கும். மே, ஜூன் ஆகிய மாதங்களில் அதிக வெப்பம் நிலவுவதால், வெளியில் கூட செல்ல முடியாத நிலை ஏற்படும்.
இந்த நாட்டில் தங்கச் சுரங்கங்கள் அதிகமாக இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்காக போர்ச்சுகீசியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே பல போர்கள் நடந்ததாகவும் வரலாறு உண்டு.
இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்குமாம். கானா மனிதனால் உருவாக்கப்பட்ட வோல்டா ஏரியின் தாயகமாகும்.
இந்த ஏரி பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஏரியாகும். உலகின் 4 ஆவது மிகப்பெரிய ஏரியாகும். நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக இந்த ஏரி முதன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். மேற்கு ஆப்ரிக்காவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை நாடாக இந்நாடு கருதப்படுகிறது.