முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: வானிலை குறித்து பிரதீபராஜா தகவல்

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 07ம் திகதி புதிய ஒரு காற்று சுழற்சி உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காற்று தொகுதியானது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை தலைவரும், வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரும் 19.12.2024 அன்று மீண்டும் ஒரு தாழமுக்கம் வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளது.

கனமான மழை  

இதுவும் மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதிரிகள் இது ஒரு புயலாக வலுப்பெறும் என தெரிவித்துள்ளார்.

மீண்டும் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: வானிலை குறித்து பிரதீபராஜா தகவல் | Sri Lanka Weather Forecast In Tamil

அதேவேளை சில மாதிரிகள் இதனை கிழக்கு மாகாணத்திற்கருகாக நகர்ந்து வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மித்து வரும் என காட்டுகின்றன.

எவ்வாறாயினும் இதனை அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும். எனவே எதிர்வரும் 09.12.2024 முதல் 25.12. 2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கடற்றொழிலாளர்கள்

குறிப்பாக எதிர்வரும் 11.12.2024 முதல் 15.12.2024 வரையும் பின்னர் 21.12.2024 முதல் 25.12. 2024 வரையும் சில பகுதிகளில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மீண்டும் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: வானிலை குறித்து பிரதீபராஜா தகவல் | Sri Lanka Weather Forecast In Tamil

அதேவேளை எதிர்வரும் 09.12.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இடையிடையே மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்றொழிலாளர்கள்  எதிர்வரும் 09.12.2024 முதல் மறு அறிவித்தல் வரை கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது” என குறிப்பிட்டுள்ளார்.   

மேலதிக செய்திகள் : பு.கஜிந்தன்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்