சிரியாவில்(syria) பசார் ஆசாத்தின்(bashar al assad) ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து அந்நாட்டில் நிலைகொண்டிருந்த ரஷ்ய(russia) படையினர் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனிய(ukraine) புலனாய்வு தகவல் வெளியிட்ட தகவலின்னபடி,
கிளர்ச்சியாளர்கள் படை டமாஸ்கஸை கைப்பற்றியதை அடுத்து சிரியாவிலிருந்து ரஷ்யா தனது ராணுவ படையை வெளியேற்ற தொடங்கியுள்ளது.
மத்தியதரைக் கடலுக்கு புறப்பட்டுள்ள ரஷ்ய கடற்படை
ரஷ்ய கடற்படையின் “அட்மிரல் கிரிகோரோவிச்”(Admiral Grigorovich) ஃபிரிகேட் மற்றும் “என்ஜினியர் ட்ருபின்”(Engineer Trubin) கப்பல் ஆகியவை சிரியாவின் டார்டஸ்(Tartus) துறைமுகத்திலிருந்து மத்தியதரைக் கடலுக்கு புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Russian military forces are fleeing Syria, taking ships and weapons with them, says Ukrainian intelligence
After militants captured Damascus, Russia began evacuating its base in Tartus. The frigate “Admiral Grigorovich” and the cargo ship *”Engineer Trubin” have left for the… pic.twitter.com/nrMCYB5Skh
— NEXTA (@nexta_tv) December 8, 2024
அதே நேரத்தில், ரஷ்ய இராணுவம் க்மெய்மிம்(Khmeimim) விமானத் தளத்திலிருந்து மீதமுள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அகற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
முற்றாக மறுத்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர்
எனினும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த செய்திகளை உண்மையற்றவை என்று மறுத்துள்ளார்.
ரஷ்ய படைகளின் இயக்கம் மத்தியதரைக் கடலில் வழக்கமான இராணுவ பயிற்சியின் ஒரு பகுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.