முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது போராட்டம்

 அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump), தொழிலதிபர் எலோன் மஸ்க்(elon musk) உடன் இணைந்து நாட்டில் சமூக பாதுகாப்பு, மருத்துவ உதவி போன்ற திட்டங்களை குறைத்துள்ளதாக தெரிவித்து அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் நேற்று06) லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போதிலிருந்து அரசின் பொருளாதார கொள்கைகளை மாற்றி வருகிறார்.

எலோன் மஸ்க் தலைமையில் சிறப்பு துறை

அதன் அடிப்படையில் அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கினார். இதற்காக தொழிலதிபர் எலோன் மஸ்க் தலைமையில் சிறப்பு துறை உருவாக்கப்பட்டது.

ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் | Protests Across America Against President Trump

அடுத்ததாக அமெரிக்க தயாரிப்புகளுக்கு வெளிநாடுகள் விதிக்கும் அதே அளவு வரியை அந்தந்த நாடுகளுக்கும் விதித்தார்.

அரசு ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்யும் வகையில் அதிகாரத்தை வலுப்படுத்துவது; சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது.

திருநங்கையரின் பாலினத்தை அங்கீகரிக்க மறுத்து உத்தரவு, இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை ஆகிய முடிவுகளையும் ட்ரம்ப் எடுத்துள்ளார்.

இதுவரை 1.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணி நீக்கம்

ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து இதுவரை 1.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஏழை அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீடு உதவி திட்ட நிதியை பெருமளவு குறைத்துள்ளார். இதனால் 7.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் | Protests Across America Against President Trump

ட்ரம்பின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 1,400க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ‘ஹேண்ட்ஸ் ஒப்’ எனப்படும், ‘உரிமைகளில் கைவைக்காதே’ என்ற பெயரில் பாரியளவில் போராட்டம் நடந்தது.

பாரியளவில் போராட்டம்

மாகாண தலைநகரங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், பூங்காக்கள், தேசிய நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் இந்த போராட்டம் ஜனநாயக கட்சியின் ஆதரவு இயக்கங்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.

ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் | Protests Across America Against President Trump

இதில் பங்கேற்றவர்கள் பல வகை எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி போராடினர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலோன் மஸ்க்கை சர்வாதிகாரி ஹிட்லர் போன்று சித்தரித்திருந்தனர். சிலர் எலோன் மஸ்க்கை நாடு கடத்த வேண்டும் என குறிப்பிட்டனர்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.