விஜயசாந்தி
பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலமாக சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் விஜயசாந்தி.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் மாஸான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் தொடர்ந்து பல படங்களி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
பிஸியான நாயகியாக வலம் வந்த போதே அரசியலில் களமிறங்கியிருந்தார்.
குழந்தை
அண்மையில் விஜயசாந்தி ஒரு பேட்டியில், திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆன போதும் குழந்தை பெற்றுக்கொள்ளாதது குறித்து பேசி உள்ளார்.
குழந்தை என்றால் யாருக்கு தான் பிடிக்காது, பெண்களுக்கு இதுதான் முக்கியமான விஷயம். இதுபற்றி நிறைய யோசித்திருக்கிறேன், ஆனால் எங்கேயோ ஓரு இடத்தில் எனக்கு குழந்தைகள் இருந்தா தெலுங்கானாவில் அதை வைத்து என்னை பிளாக்மெயில் பண்ணுவாங்கனு சந்தேகம் வந்தது.
அப்போது இருந்த சூழ்நிலையும் மோசமாக இருந்தது. எனது கணவரிடம் இதுபற்றி கூறியபோது அவரும் எனது முடிவை ஏற்றுக்கொண்டார் என பேசி இருக்கிறார்.