பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது கதையில் பாண்டியன் வீட்டில் இருந்து பழனிவேல் மொத்தமாக விலகிவிட்டார், இப்படி நடக்க வேண்டும் என்று தான் அவரது அண்ணன்கள் கிரிமினல் பிளான் செய்து கடையை திறந்தார்கள்.
பழனிவேல் தெரிந்தே தான் இப்படியொரு வேலை செய்தார் என பாண்டியன் வீட்டில் இருந்த அனைவரும் அவர் மீது கோபப்பட்டார்கள், நாளுக்கு நாள் பிரச்சனையும் வெடித்துக் கொண்டு இருக்கிறது.

எபிசோட்
இன்றைய எபிசோடில், கதிரை குமரவேல் கடையில் அடித்த வீடியோவை சுகன்யா ராஜிக்கு அனுப்பி வைக்க பிரச்சனை வெடித்தது.
செம கோபத்தில் இருந்த ராஜி வீட்டிற்கு வந்த குமாரின் சட்டையை பிடித்து எப்படி என் புருஷனை அடிக்கலாம் என சண்டை போடுகிறார். அவருக்கு துணையாக கோமதியும் வந்து சண்டை போடுகிறார், ஆனால் கதிர் பிரச்சனை வேண்டாம் என தனது வீட்டுப் பெண்களை அழைத்துச் செல்கிறார்.

அந்த சண்டையில் குமரவேலுக்கு சப்போர்ட்டாக ராஜி அம்மா, சித்தி பேச அவர்கள் மீதும் செம கோபப்படுகிறார்.
தனது அம்மா மனசாட்சி இல்லாமல் பேசுகிறார் அவருக்காகவா மீனா அக்காவை கோபித்துக் கொண்டேன் என புரிந்துகொண்டு அவர் வீட்டிற்கு செல்கிறார்.

மீனா-ராஜி இருவரும் சந்தித்துக்கொண்டு தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி மீண்டும் இணைகிறார்கள்.

