யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு(Teaching Hospital Jaffna) மதுபோதையில் நுழைந்த நபரொருவர் அங்கிருந்த காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று(19) இடம்பெற்றுள்ளது.
மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே இவ்வாறு குறித்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்தியுள்ளார்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து 35 வயது மதிக்கத்தக்க அந்த நபர் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த காவலாளி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.