குளியாப்பிட்டி பொலிஸ் நிலைய குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி உடனடியாக
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொது மகன் ஒருவர் தாக்கப்பட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத்
தொடர்ந்து அவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்தியவர்
முன்னதாக, ஒருவர் தடியால் தாக்கப்படுவதை சித்தரிக்கும் காணொளி ஒன்று வெளியானது.
இது தொடர்பான விசாரணையில், தாக்குதலை நடத்தியவர் குளியாப்பிட்டி பொலிஸ் நிலைய
குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரி குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்திலிருந்து
மாவதகம பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
விசாரணை முடிந்ததும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்
தரப்பு தெரிவித்துள்ளது.

