நாடளாவிய ரீதியில் பண்டிகைக் காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுமார் 150,000 Breath Analyzers விநியோகிக்கப்பட்டுள்ளன.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடு தழுவிய ரீதியில் இன்று (24) பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.