முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காலத்தால் மறக்க முடியாத வலி தந்த சுனாமி : 20 வருடம் கழிந்தும் மாறா தொடர்…

ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தின் வலி சுமந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆழிப் பேரலையின் அகோரம் ஈழத்தமிழர்களுக்கும் அதீத இழப்புக்களை ஏற்படுத்திச் சென்றது.

ஈழப்போராட்ட முன்னெடுப்புக்களை அது காலம் தாழ்த்திப்போக செய்துவிட்டது. ஈழக்கவிஞர்களையும் ஆழிப்பேரலை பற்றி பாடல்களை புனையச்செய்ததும் நோக்கத்தக்கது.

சுனாமி… 20 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு சொல் இலங்கை அறிந்தது இல்லை. உலக நாடுகளே கூட சுனாமியின் கோரத்தாண்டவம் இவ்வளவு கொடூரமானதா? என அதிர்ந்ததும் அப்போதுதான்.

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் திகதி சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரமான மூர்க்கத் தாக்குதலில் இந்தோனேசியா முதல் ஆப்பிரிக்கா வரை பல லட்சக்கணக்கான மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்ட துயரமான நாள்..

காலத்தால் மறக்க முடியாத வலி தந்த சுனாமி : 20 வருடம் கழிந்தும் மாறா தொடர்... | 2004 Indian Ocean Earthquake And Tsunami Sri Lanka

இயற்கைப் பேரிடர்களில் பெருந்துயரைத் தரக் கூடியது. 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளின் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலைகள் பல்லாயிரம் கிலோ மீட்டவர் வரை சீறிப் பாய்ந்தது.

இந்தோனேசியா தொடங்கி இலங்கை, இந்தியா, ஆப்பிரிக்கா என பல நாடுகளின் கடலோர மக்களை கொத்து கொத்தாக தன்னுள் கடல் அன்னை விழுங்கிக் கொண்ட நாள்.

கடந்த 300 ஆண்டுகளில் இல்லாதவகையில் கடல் அலைகள்- ஆழிப் பேரலைகளாக 30,40 அடி உயரத்துக்கு சீறிக் கொண்டு கடலோர கிராமங்களுக்குள் ஆவேசம் காட்டி நுழைந்து மனிதர்களையும் கட்டிடடங்களையும் அகப்பட்டதையெல்லாம் அள்ளிக் கொண்டு உள்வாங்கி திரும்பியது.

இலங்கை மட்டும்  35,000 க்கும் அதிகமானோர் பலியானதுடன் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.  

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் இன்று (26.12.2024) காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணிக்குள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும்.

தேசிய பாதுகாப்பு தினமான இன்று இந்த மௌனம் கடைப்பிடிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.