விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்யாவின் வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டனர். கோபியை வீட்டை விட்டு அனுப்ப பாக்யா எப்படி முயற்சித்தாலும் ஈஸ்வரி தான் கோபியை அதே வீட்டில் இருக்க வேண்டும் என வைத்திருக்கிறார்.
கோபி இதற்குமுன் வில்லத்தனமான செயல்பட்டு பாக்யாவின் ஹோட்டல் பிரியாணியில் கெட்டுப்போன சிக்கன் போட்டு பிரச்னையை ஏற்படுத்தி இருந்தார். அந்த புகார் தொடர்பான வழக்கு தற்போது மீண்டும் கோபிக்கு தலைவலியாக மாறி இருக்கிறது.
லேட்டஸ்ட் ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோவில் அந்த வழக்கின் விசாரணைக்காக அழைப்பாணை வருகிறது. அதை கேட்டு ஈஸ்வரி, கோபி ஷாக் ஆகிறார்கள்.
நான் தான் தவறு செய்தேன், என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என கோபி கூறுகிறார்.
அதன் பின் அவர்கள் நீதிமன்றம் சென்று கூட்டில் ஏறி நிற்கின்றனர். பாக்யா அங்கே என்ன சொல்ல போகிறார்?
பொறுத்திருந்து பார்ப்போம்