தமிழ் மக்களின் பழம்பெரும் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சீறிதரனை (S. Shritharan) தலைவராக செயற்பட விடாமல் பதில் தலைவர் ஒருவரை உருவாக்குகின்ற முயற்ச்சியில் கட்சின் தலைகள் செயற்படுவதாக அரசியல் ஆய்வாளர் தி. திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு நன்மை பயக்க கூடிய எந்த ஒரு விடயத்தையும் செய்யாமல். தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வேளைத்திட்டங்கள் வரும் போது அவற்றை நாசமாக்கும் சட்ட பயங்கரவாதிகாளகவும் தமிழ் அரசியல் தலைகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மிகவும் வக்கிரமான தொனியில் பேசியதாகவும் அரசியல் ஆய்வாளர் தி. திபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வாக்குகளை பெற்ற ஒரு பிரதிநிதி, பொது இடங்களில் பேசும் போது, தனது வார்த்தைகளை கவனமாக வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே கட்சிக்குள் இருப்பவரை பகை முரண்பாடுடன் பார்ப்பதை இதில் இருந்து அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பகை முரண்பாடு இனவாத அரசியல்வாதிகளுடன் இருக்க வேண்டுமே ஒழிய, தமிழ் தரப்பிற்குள் இருக்கக் கூடாது எனஅரசியல் ஆய்வாளர் தி. திபாகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சிக்குள் ஊடகபேச்சாளர் ஒருவர் இருக்கும் போது தாம் பொது வெளியில் கருத்து தெரிவிப்பது கட்சியில் விதிமுறைகளுக்கு முரணான செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://www.youtube.com/embed/UyTwOYwV3p8