ராஷ்மிகா மந்தனா
உலகளவில் பிரபலமான இந்திய நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா 2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இந்திய சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக புஷ்பா 2 மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
[3J9N5H ]
மதகஜராஜா படம் எப்படி இருக்கு.. வெளிவந்த ரசிகர்களின் விமர்சனம் இதோ
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர். தன்னுடைய லேட்டஸ்ட் அப்டேட்ஸை தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவு செய்வார்.
காலில் அடி
இந்த நிலையில், காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை ராஷ்மிகா மந்தனா பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த பதிவில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது தனது அடிபட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்கள் ராஷ்மிகா மந்தனாவை சில வாரங்கள் ஓய்வு எடுக்க கூறியுள்ளனர். இதனால் தற்போது ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram