முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 50,000 வாகனங்கள்

இலங்கைக்கு இந்த வருடத்திற்குள் 50,000 வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே (Prasad Manage) தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து வருடமாக காணப்பட்ட வாகன இறக்குமதிக்கான தடை எதிர்வரும் பெப்ரவரி மாதம் தளர்த்தப்படவுள்ள நிலையில், தற்போது புதிய வரி கொள்கைகளுக்குக்கு மேலாக வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான முழு வரியானது 500 சதவீதமாக அதிரிக்கக்கூடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும், பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரிக் கொள்கைகளை அரசாங்கம் அறிவித்திருந்தாலும் அதன் நன்மைகள் வாகன விற்பனையாளர்களால் அநீதியான முறையில் பெற்றுக் கொள்ளப்படும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வரிக் கொள்கை

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 50,000 வாகனங்கள் | 50 000 Vehicles To Be Imported To Sl Within 2025

அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் அரசாங்கம் அறிவிக்கும் வரி விகிதங்களால் நுகர்வோர் பயனடையமாட்டார்கள் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல (Wasantha athukorala) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதுள்ள வரிக் கொள்கைக்கும் முன்னர் இருந்த வரிக் கொள்கைக்கும் பாரிய வித்தியாசங்கள் இல்லை.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரிகள் சாதாரணமாக 300 சதவீதத்திற்கும் 400 சதவீதத்திற்கும் இடையில் உள்ளது.

வாகன விற்பனையாளர்கள் 

இந்தநிலையில், வாகன விற்பனையாளர்கள் வாகன சந்தையில் பாரிய மாஃபியாவை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், குறிப்பிட்ட சில வாகனங்களுக்கான விலை முகாமைத்துவத்தை பேணி வருகின்றனர்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 50,000 வாகனங்கள் | 50 000 Vehicles To Be Imported To Sl Within 2025 

இதன் காரணமாக நுகர்வோர் பயனடையமாட்டார்கள். ஆகையால் தற்போதுள்ள வரிக் கொள்கைக்கு அமைய, வர்த்தகர்களும் இடைத்தரகர்களுமே பயனடைவார்கள்“ என வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.