வடக்கில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் தவறாக செய்தி வெளியிட்டதன் காரணமாக சிங்கள பத்திரிகை ஒன்றின் ஆசிரியருக்கு சிஐடியில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அவரை இன்றைய தினம் (20.01.2025) குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகும் படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குற்ற புலனாய்வு
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுளளது.
இதற்கு முன்னரும் குறித்த பத்திரிகை இது தொடர்பில் தவறான செய்தி வெளியிட்டிருந்தமை தொடர்பில் பத்திரிகையின் செய்தி ஆசிரியர், துணை ஆசிரியர் மற்றும் நீதிமன்ற நிருபர், உள்ளிட்டோர் விசாரணைக்காக குற்ற புலனாய்வு திணைக்களத்தில் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் வடக்கில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுகள் குறித்து அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பல தவறான கருத்துக்கள் மற்றும் காணொளிகள் என்பன பிரசுரிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் அரசினால் தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகினறமை குறிப்பிடத்தத்தது.