இலங்கை மத்திய வங்கி புதிய முதலீட்டு மூலோபாய அணுகுமுறைகளை பின்பற்ற திட்டமிட்டுள்ளது.
இதன்படி பல்வேறு புதிய முதலீட்டு திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரித்து கொள்வதனை முன்னுரிமைப்படுத்தி இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
பல்வேறு மாறுபட்ட சந்தைகளில் புதிய மூலோபாயங்களின் அடிப்படையில் இந்த முதலீட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நிய செலாவணி
சேவைகள் வர்த்தகம் மற்றும் தொழிலாளர்களின் பண பரிமாற்றல்களில் இருந்து அதிக அளவு அந்நிய செலாவணி கிடைக்கப்பெறும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை எதிர் நோக்கும் என இலங்கை மத்திய வங்கியை கணித்துள்ளது.
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட வேண்டும் எனவும் இதற்கு வலுவான அடித்தளம் ஒன்றை இடவேண்டும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
முதலீட்டுத் திட்டங்கள்
இந்த நோக்கங்ளை முன்னிலைப்படுத்தி முதலீட்டுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்பு காரணமாக நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பணியாளர்களின் பண அணுக்கள் வரலாறு காணாத அடிப்படையில் அதிகரிக்கும் என நம்பிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அந்நிய செலவாணி கையிருப்பினை மேம்படுத்தக்கூடிய மூலோபாயங்கள் வகுக்கப்பட்டு முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி முதலீட்டுத் திட்டங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை கருத்திற்கொண்டு முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.