போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) சாதாரண பயணியாக தொடருந்தில் பயணித்துள்ளார்.
இன்று(20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த அலுவலக தொடருந்திலேயே அவர் இவ்வாறு சாதாரண பயணியாக பயணித்துள்ளார்.
Minister of Transport Bimal Rathnayake was seen travelling as an ordinary passenger in an office train from Moratuwa to Colombo Fort this morning.
Social media posts featuring pictures of the minister interacting with commuters revealed that he engaged in discussions about… pic.twitter.com/8C1WlsBd9l— Manjula Basnayake (@BasnayakeM) January 20, 2025
சாதாரண பயணியாக அமைச்சர்
அமைச்சர் பயணிகளுடன் உரையாடுவதையும், தொடருந்தில் பயணிகள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொள்வது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இதன்போது அடிக்கடி தொடருந்து தாமதம், மின் விசிறிகள் பழுதடைதல், மாற்றுத் திறனாளிகள் தொடருந்தில் ஏறும் போது ஏற்படும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் தொடருந்து நிலையங்களில் உள்ள சுகாதாரமற்ற நிலை, தொடர்ந்து பயன்படுத்துதல் போன்றவற்றைப் பற்றி பயணிகள் கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.