முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் – இறுதிச்சடங்கு தொடர்பில் தகவல்

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் (Victor Ivan) இறுதிச்சடங்கை அவரது இறுதி விருப்பத்தின் பிரகாரம் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத அனுஷ்டானங்களின் பின்னர் மிகவும் எளிமையான முறையில் தமது இறுதிச்சடங்கை நடத்துமாறு அவர் கேட்டுக் கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுகவீனம் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் (Galle National Hospital (Teaching) Karapitiya) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தனது 75 ஆவது வயதில் நேற்று(19) பிற்பகல் காலமானார்.

அச்சமற்ற செய்தி அறிக்கையிடல்

1971ஆம் ஆண்டின் ஜே.வி.பி. முதலாவது கிளர்ச்சியில் லொகு அதுல எனும் புனைப் பெயரில் பங்குகொண்ட விக்டர் ஐவன், அதன் பின்னர் 1985களில் ராவய எனும் சிங்கள புலனாய்வு வார இதழொன்றை ஆரம்பித்திருந்தார்.

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் - இறுதிச்சடங்கு தொடர்பில் தகவல் | Veteran Journalist Victor Ivan Passes Away

“ராவய” பத்திரிகை தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.

விக்டர் ஒரு புலனாய்வு பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், கோட்பாட்டாளர், சமூக ஆர்வலர் மற்றும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

புலனாய்வு செய்தி அறிக்கை

அக்காலகட்டத்தில் பல்வேறு அரசியல்வாதிகளின் ஊழல், மோசடிகளை மாத்திரமன்றி நீதித்துறை சார் நபர்களின் மோசடிகளையும் கூட துணிச்சலுடன் அம்பலப்படுத்தியிருந்தார்.  

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் - இறுதிச்சடங்கு தொடர்பில் தகவல் | Veteran Journalist Victor Ivan Passes Away

விக்டர் ஐவன் இலங்கையின் புலனாய்வு செய்தி அறிக்கையிடலின் முன்னோடியாக திகழ்கின்றார்.

அச்சமற்ற செய்தி அறிக்கையிடல் மற்றும் கூர்மையான வர்ணனைக்கு பெயர் பெற்ற இவர், இலங்கை ஊடகங்களில் ஒரு முக்கிய நபராக தனது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்