முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோழி இறைச்சி விற்பனையில் வீழ்ச்சி!

மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால் நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் 600 மெற்றிக் தொன் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டாலும், தற்பொழுது நாளாந்தம் கோழி இறைச்சி விற்பனை 500 மெற்றிக் தொன் வரை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வருமானம்

கோழிக்கறிக்கான தேவை குறைந்துள்ளதால் ஐஸ் கோழியின் (உறைந்த கோழி) விலை (தோலுடன்) கிலோ ரூ.800 ஆக குறைந்துள்ளது.

கோழி இறைச்சி விற்பனையில் வீழ்ச்சி! | Chicken Sales Dropped   

இந்த நாட்களில் முட்டை ஒன்றின் விலை 30 முதல் 33 ரூபா வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறைவால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உற்பத்தி செலவை ஈடுகட்ட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சி உற்பத்திக்கு 750 ரூபாயும், முட்டை உற்பத்தி செய்ய 34 ரூபாயும் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

நெருக்கடி

கோழி பண்ணைகளின் உற்பத்தி செலவில் 75 வீதம் கால்நடை தீவனத்திற்காக செலவிடப்படுவதாகவும், கால்நடை தீவனத்திற்கு பெறுமதி சேர் வரி உட்பட 20 வீத வரி விதிக்கப்படுவதால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சி விற்பனையில் வீழ்ச்சி! | Chicken Sales Dropped

கால்நடை தீவனத்தின் மீதான வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்தால், நுகர்வோருக்கு குறைந்த விலையில் கோழி மற்றும் முட்டைகளை விற்பனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஒரு முட்டைக்கு 6 ரூபாயும், ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு 220 ரூபாயும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்