நாடாளுமன்ற வலைத்தளத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேனவின்(Chrishantha Abeysena) பெயரில் சேர்க்கப்பட்ட ‘பேராசிரியர்’ என்ற பட்ட தலைப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் நேற்று(21) இந்த மாற்றம் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
பல்கலைக்கழக சேவையில் இல்லாததால் பட்டம் நீக்கம்
அமைச்சர் கிருஷாந்த அபேசேன, ‘பேராசிரியர்’ என்ற பட்டத்தை வைத்திருந்தாலும், தற்போது பல்கலைக்கழக சேவையில் இல்லாததால் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தனது பெயரில் ‘பேராசிரியர்’ என்ற பட்டம் சேர்க்கப்படவில்லை என்று கூறிய அவர், தனது பல்வேறு ஆவணங்களிலும் அது இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
நீதியமைச்சரின் பட்டமும் நீக்கம்
இதற்கிடையில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின்(Harshana Nanayakkara) பெயரில் சேர்க்கப்பட்ட ‘கலாநிதி’ என்ற பட்டமும் அமைச்சரின் கோரிக்கையைத் தொடர்ந்து, சமீபத்தில் நாடாளுமன்ற வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டது.
நீதி அமைச்சர் அத்தகைய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாதபோது தலைப்பு சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணக்களத்திலும் (CID) அவர் புகார் அளித்திருந்தார், தற்போது இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.