முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிமலுடன் கருத்து வேறுபாடு: பதவி விலகிய அரச நிறுவன தலைவர்

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக செயற்பட்டு வந்த ரமால் சிறிவர்தன தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக மூன்று தடவைகள் செயற்பட்டுள்ளதோடு கடந்த ஆண்டு அமைச்சர் விஜித ஹேரத்தினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டது.

தற்போது அவர் பதவி விலகியிருப்பதை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார்.

அர்ஜுன ரணதுங்கவுடன் கருத்து வேறுபாடு

1994 முதல் 2001 வரை சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், 2006 முதல் 2007 வரை மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகத்திலும், 2015 முதல் 2019 வரை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக பணியாற்றினார். 

பிமலுடன் கருத்து வேறுபாடு: பதவி விலகிய அரச நிறுவன தலைவர் | Sri Lanka Transport Board Chairman Resigns

2019ஆம் ஆண்டில், ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராகப் பணியாற்றியபோது, ​​சந்தேகத்திற்கிடமான காப்பீட்டு பரிவர்த்தனைக்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதையடுத்து அவர் அப்போது பதவி விலகியிருந்தார். 

அப்போதைய போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பதவி விலகியதாக கூறப்பட்டது. 

இரண்டாவது பதவி விலகல் 

இதனையடுத்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளராக கம்பஹா நகராட்சி மன்றத்திற்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார். 

பிமலுடன் கருத்து வேறுபாடு: பதவி விலகிய அரச நிறுவன தலைவர் | Sri Lanka Transport Board Chairman Resigns  

தற்போது அவர் பதவி விலகியுள்ளதால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் அரச நிறுவனமொன்றின் தலைவர் ஒருவர் பதவி விலகுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

முன்னதாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் செனேஷ் திஸாநாயக்க தனது பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.