முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவுக்கு இது தகுதியல்ல! வீட்டில் இருந்து ஒழுக்கமாக வெளியேறுமாறு அறிவித்த அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு (Mahinda Rajapaksa) வழங்கப்பட்ட வீட்டை அவர், ஒழுக்கத்துடன் கையளித்து விட்டு செல்ல வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். 

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று (28) உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், “வீட்டை கையளித்து விட்டு செல்லுமாறு நாம் அரசாங்கம் என்ற வகையில், நாடாளுமன்றத்தில் கூறியிருந்தோம்.

சந்திரிக்கா குமாரதுங்க, மைத்திரிபால, மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரிற்கு புதிதாக ஒரு சட்டம் தேவையில்லை.

முந்தைய ஜனாதிபதிகள் 

இதற்கு முன்னர் இந்த இல்லத்தைப் பயன்படுத்திய முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஹேமா பிரேமதாச அதனை ஒப்படைத்துவிட்டுச் சென்றார். அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்சவும் அவ்வாறே செயற்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைப் பயன்படுத்தியிருக்கவில்லை. இவர்களும் முன்னாள் ஜனாதிபதிகளே.

அவ்வாறிருக்கையில் அவர்களுக்கொரு சட்டம், இவர்களுக்கொரு சட்டம் இல்லை.

மைத்திரிபால சிறிசேனவின் வீடு தொடர்பில் உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொருத்தமான வீடு தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இவை அனைத்தையும் பார்த்து அவர்கள் தீர்மானம் எடுத்திருக்க வேண்டும் அல்லவா?

புனரமைப்பு செலவுகள் 

தேவை என்றால் மேலும் பல விடயங்களை கூற முடியும். இந்த வீட்டை தொடர்ந்தும் அனுபவிப்பதற்காக தாம் அதிகாரத்தில் இருந்த போது வீட்டை புனரமைத்துள்ளதாகவும் கூறமுடியும்.

மகிந்தவுக்கு இது தகுதியல்ல! வீட்டில் இருந்து ஒழுக்கமாக வெளியேறுமாறு அறிவித்த அரசாங்கம் | Mahinda Rajapaksa House Issue Gov Revealed Details

அத்துடன், தமது ஆட்சி காலத்தில் அரச பணத்தை செலவு செய்து தமது வாழ்நாட்களின் நலனுக்காக உருவாக்கி கொண்ட வீடாக உள்ளது.

குறித்த வீட்டை புனரமைப்பதற்கு 2021ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை மாத்திரம், 472.52 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளனர்.

கட்டடத்தின் உபகரணங்களுக்காக 140 மில்லியன் ரூபாவும், சிவிலிங் வேலைகளுக்காக 30.5 மில்லியன், வடிவமைப்பு உற்பத்திக்காக 32.17 மில்லியன், மின்சார உபகரணங்களுக்கு 38.9 மில்லியன், பலகை கொள்வனவு 36.3 மில்லியன், தரைக்கான மர வேலைப்பாடுகளுக்கு (மரத்தளம்) 35.17, க்ரனைட்டுக்கு 15.8 குளிரூட்டி கட்டமைப்புக்கு மற்றம் 46.9 மில்லியன் என செலவு செய்துள்ளனர்.

மகிந்தவுக்கு இது தகுதியல்ல! வீட்டில் இருந்து ஒழுக்கமாக வெளியேறுமாறு அறிவித்த அரசாங்கம் | Mahinda Rajapaksa House Issue Gov Revealed Details

இதன் மொத்தம் 472.52 மில்லியன் ரூபாவாகும். உண்மையிலேயே இது அரசாங்கத்திற்கு பாரமாகும்.

இயலுமானவரையில் வீட்டை நாங்கள் அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கூறியுள்ளோம்.

கடிதம் அனுப்பினால் தான் வெளியேறுவோம் என்றும் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்கள் அல்ல. முன்னாள் ஜனாதிபதிகளாவர். எனவே இவர்கள் இவ்வாறு செயற்படுவது அவர்கள் வகித்த பதவிக்கு தகுதியானதல்ல.

எனவே பூதங்களைப் போன்று இல்லங்களைப் பிடித்துக் கொண்டிருக்காமல் ஒழுக்கமாக வெளியேறிவிட வேண்டும். மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் குறித்த வீட்டை அரசாங்கத்திற்கு கையளிப்பார் என நாம் எதிர்பார்க்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.