முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லசந்த படுகொலைச் சம்பவ வழக்கு! முக்கிய சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை

லசந்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து முக்கிய சந்தேக நபர்கள் மூவரை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 09ஆம் திகதி, தெஹிவளை, அத்திடிய பிரதேசத்தில் வைத்து சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அக்காலத்தில் பதவியில் இருந்த ராஜபக்‌ச அரசாங்கத்தையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌சவையும் அவர்களின் ஊழல், மோசடிகள் தொடர்பில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கியதன் காரணமாகவே லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்தது.

ராஜபக்‌ச சகோதரர்களின் ஆட்சிக்காலம்

அதனை நிரூபிக்கும் வகையில் ராஜபக்‌ச சகோதரர்களின் ஆட்சிக்காலத்தில் லசந்த படுகொலை தொடர்பான தடயங்களை மறைப்பதற்கு முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதான செய்திகள் வெளியாகியிருந்தன.

லசந்த படுகொலைச் சம்பவ வழக்கு! முக்கிய சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை | Lasantha Murder Case Suspects To Be Freed

அதன் ஒருகட்டமாக துப்பாக்கியால் சுடப்பட்டே லசந்த படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அப்போதைய சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை தெரிவித்திருந்தது.

 அதே ​போன்று லசந்தவின் படுகொலை விவகாரம் ஒரு பெண்ணுடனான முறையற்ற தொடர்பின் காரணமாக பழிவாங்கும் ​நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அதன் ஊடாக லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் திசை திருப்பப்பட்டிருந்தன.

லசந்த விக்ரமதுங்க படுகொலை

எனினும் பின்னர் வந்த நல்லாட்சிக் காலத்தில், அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முன்னெடுப்பின் காரணமாக லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் ஆராய விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

லசந்த படுகொலைச் சம்பவ வழக்கு! முக்கிய சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை | Lasantha Murder Case Suspects To Be Freed

அதன்போது லசந்த துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்படவில்லை என்றும் , கூரிய ஆயுதமொன்றினால் தலையில் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் தெரியவந்தது.

அதே போன்று லசந்த விக்ரமதுங்கவின் காரைப் பின்தொடர்ந்து விரட்டி வந்து அவரைப் படுகொலை செய்தவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கம், அவர்கள் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் என்பனவும் விசாரணையாளர்களால் கண்டறியப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் செயற்பட்ட ட்ரிபொலி பிளட்டூன் இராணுவப் பிரிவு அவற்றைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

தொடர்ந்தும் அதே தொலைபேசி இலக்கத்தை அவர்கள் பயன்படுத்தி வருவதும் அக்காலத்தில் விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் அந்தத் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்திய இராணுவச் சிப்பாய்களின் விபரங்களை பொலிஸாரால் பெற்றுக்கொள்ள முடியத நிலை காணபடப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வர முன்னர் லசந்த விக்ரமதுங்க படுகொலையாளிகளைக் கண்டறிந்து தண்டனை வழங்குவதாக உறுதியளித்திருந்தது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகடகவும் அதுகுறித்து பல்வேறு தடவைகள் தனிப்பட்ட முறையில் வாக்குறுதியளித்திருந்தார்.

லசந்த படுகொலைச் சம்பவ வழக்கு! முக்கிய சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை | Lasantha Murder Case Suspects To Be Freed

இவ்வாறான பின்புலத்தில் தற்போது லசந்த விக்ரமதுங்க படுகொலையின் முக்கிய மூன்று சந்தேக நபர்களை , குறித்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 27ஆம் திகதி அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரேம் ஆனந்த உதலாகம, ஹெட்டிஆரச்சிகே தொன் திஸ்ஸசிறி சுகதபால, விதாரண ஆரச்சிகே சிரிமெவன் பிரசன்ன நாணயக்கார ஆகிய மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உத்தேசம் இல்லை என்று சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்யமுடியும் என்று நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறும், அவ்வாறு அறிவித்துள்ளமை குறித்து 14 நாட்களுக்குள்ளாக தனக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும் சட்ட மா அதிபர்,குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதில் பிரேம் ஆனந்த உதலாகம என்பவர் , இராணுவ ஸ்டாப் சார்ஜண்ட். இராணுவப் புலனாய்வுப்பிரிவில் பணியாற்றுகின்றார்.

லசந்த படுகொலையின் பின்னர், குறித்த சம்பவத்துடன் கோட்டாபயவுக்குத் தொடர்பிருப்பதாக லசந்தவின் சாரதி பல்வேறு இடங்களில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் காரணமாக இந்த பிரேம் ஆனந்த் உதலாகம எனும் இராணுவ அதிகாரி, லசந்தவின் சாரதியைக் கடத்தி அச்சுறுத்தியதான செய்திகளும் வெளியாகியிருந்தன.

ஊடகவியலாளர்கள்  கண்டனம்

2016ஆம் ஆண்டின் ஜூலை 07ம்ஆ திகதி கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது லசந்தவின் சாரதி, பிரேம் ஆனந்த உதலாகமவை தெளிவாக அடையாளம் காட்டியிருந்தார்.

லசந்த படுகொலைச் சம்பவ வழக்கு! முக்கிய சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை | Lasantha Murder Case Suspects To Be Freed

விடுதலை செய்யப்படுவதற்குச் சிபாரிசு செய்யப்பட்டுள்ள மற்றையவரான தொன் திஸ்ஸசிறி சுகதபால, லசந்த படுகொலைச் சம்பவத்தின் போது கல்கிஸ்ஸை பொலிசின் குற்றத் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரியாக இருந்தவர்.

லசந்தவைத் துரத்திய கொலையாளிகளின் மோட்டார் சைக்கிள் இலக்கம் எழுதப்பட்டிருந்த லசந்தவின் “பொக்கட் நோட் புக்கை“ இவர்தான் கைப்பற்றி ஒளித்திருந்தார் என தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, லசந்த படுகொலைச் சம்பவத்தின் முக்கிய தடயங்களை அழித்ததாகவும் லசந்தவின் சாரதி கூறியுள்ளார்.

இந்நிலையில்,  சட்ட மருத்துவ அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுத்து துப்பாக்கிச் சூட்டினால் மரணம் சம்பவித்ததாக எழுத வைத்தவர்

இவ்வாறான ஆதாரபூர்வமான குற்றப் பின்னணி உடையவர்கள் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படும் போது வழக்கு நீர்த்துப் போகும் என்று ஊடகவியலாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.