வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம் தான். அப்படி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைத்தது. மேலும் தற்போது இவர் கைவசம் இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.


மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்? உண்மை இதுதான்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர், முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவரை போலவே ஆகவேண்டும் என பல இளைஞர்களை சினிமாவில் போராடி கொண்டு இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன்
அவர் வேறு யாருமில்லை ரசிகர்களால் பிரின்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் தான். ஆம், அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பராசக்தி, மதராஸி என இரண்டு படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயனின் சிறு வயது புகைப்படம் தான் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இந்த சிறு வயதில் புகைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், அவரது மனைவி ஆர்த்தியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


