நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானில் நடைபெற்றது. அதில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
திருமணம் முடிந்த பின் மொத்த குடும்பமும் பல்வேறு நாடுகளுக்கு கப்பல் மூலமாக சென்று வருகின்றனர். முன்பு வியட்னாம் நாட்டை தொடர்ந்து தற்போது சிங்கப்பூருக்கு அவர்கள் சென்று இருக்கின்றனர்.
திருமணமாகி 100 நாட்கள் ஆகிவிட்டதாக சமீபத்தில் நெப்போலியன் குடும்பத்தினர் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் உலா வந்ததை நாம் அறிவோம்.
தேசிய விருது பெறும்போது இதை செய்வேன்.. நடிகை சாய் பல்லவி உருக்கம்
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், சிங்கப்பூரில் ஜாலியாக குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் நெப்போலியன் அங்கே எதிர்பாராமல் ஹிப் ஹாப் ஆதியை சந்தித்துள்ளார்.
நெப்போலியன் மற்றும் ஹிப் ஹாப் ஆதி இணைந்து அன்பறிவு படத்தில் நடித்திருப்பர். தற்போது, அந்த படத்தின் காட்சிகள் மற்றும் இவர்கள் சந்தித்தவை வைத்து ஆதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
எத்தனை நாள் கழித்து பார்த்தாலும் அதே பாசம் ❤️ என் மனம் கவர்ந்த கலைஞர், மனிதர் – எங்கள் அன்பிற்குரிய நெப்போலியன் அண்ணா ❤️😁 Surprise visit at Singapore ! One more memorable memory i took back from the singapore press meet ❤️ pic.twitter.com/Koq5bzvsBb
— Hiphop Tamizha (@hiphoptamizha) February 18, 2025