முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சட்டவிரோத சொகுசு வாகனங்களை பயன்படுத்திய அரசியல்வாதிகள்! அநுர எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை நாட்டுக்குள் கொண்டுவந்து பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

குருணாகல் – பொல்பித்திகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, “கடந்த காலங்களில் வாகன இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோத வாகனங்கள்

எனினும் புதிய சொகுசு வாகனங்களை சட்டவிரோதமான முறையில் விடுத்து பலர் பயன்படுத்தியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளாவர்.

சட்டவிரோத சொகுசு வாகனங்களை பயன்படுத்திய அரசியல்வாதிகள்! அநுர எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை | Politicians Illegal Luxury Vehicles Anura Action

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் லொஹான் ரத்தவத்த போன்றவர்களின் சட்டவிரோத வாகனங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, இன்னும் சில நாட்களில் மேலும் ஓரிருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்படக்கூடும்.

அநாவசிய செலவுகள் 

அத்துடன், கடந்த காலங்களில் ஜனாதிபதி ஒருவருக்கான பாதுகாப்புக்காக 7 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

நாட்டில் யுத்தமோ, பாரிய அச்சுறுத்தலோ இல்லாத நிலையில் அவ்வாறான பாதுகாப்பு தேவையில்லை. அநாவசிய செலவுகளை குறைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு திருத்தப்பட்டதே தவிர அதில் எந்த பழிவாங்கல் நோக்கமும் இல்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம வீதியில் உள்ள விசாலாமான இல்லத்தில் 2 பேரே வசித்து வருகின்றன.

சட்டவிரோத சொகுசு வாகனங்களை பயன்படுத்திய அரசியல்வாதிகள்! அநுர எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை | Politicians Illegal Luxury Vehicles Anura Action

எனவேதான் அவர்களுக்கு பொருத்தமான வீடொன்றை தருகின்றேன் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கூறுகிறேன்.

எனது ஓய்வின் பின்னர் எனக்கு பாதுகாப்போ, பெரிய இல்லமோ தேவையில்லை என நான் எழுத்துமூலம் அறிவிப்பதற்கு எதிர்பார்க்கிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்