முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டை வந்தடைந்த வாகனங்கள் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

புதிய இணைப்பு

தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்கள் அடுத்தவாரம் முதல் விற்பனைக்கு வரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வெகன் ஆர் காரை 6,500,000 ரூபா முதல் 7 ,500,000 ரூபா வரையிலும், ஆர்எஸ் காரொன்றை 8,000,000 ரூபா முதல் 10,000,000 ரூபா வரையிலும், வெசல் ரக காரை 165 இலட்சம் ரூபா முதல் 200 இலட்சம் வரையிலும் விற்பனை செய்ய முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு 

இலங்கையில் சுமார் 5 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்ட நிலையில் இரண்டாவது தொகுதி வாகனம் நாட்டை வந்தடைந்துள்ளது.

அதன்படி ஜப்பானிலிருந்து (Japan) நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட 196 வாகனங்கள் நேற்றைய தினம் (27) ஹம்பாந்தோட்டை (Hambantota) துறைமுகத்தை வந்தடைந்தது.

அதற்கமைய, வெகன் ஆர், எல்டோ, டெயோட்டா யரிஸ், டெயேட்டா ரொய்ஸ், வெசல் உள்ளிட்ட வாகனங்கள் ஜப்பானில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதிக்கு தடை 

மேலும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கெப் ரக வாகனங்கள் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டை வந்தடைந்த வாகனங்கள் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் | 196 Vehicles Imported From Japan To Sri Lanka

டொலர் நெருக்கடி, கொரோனா தொற்று உள்ளிட்ட காரணிகளால் மோசமான பொருளாதார பாதிப்பை எதிர்கொண்ட 2020 ஆம் ஆண்டில் பல பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் வாகன இறக்குமதியையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், பொருளாதாரம் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில், கடந்த வருட இறுதியில் வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

YOU MAY LIKE THIS

https://www.youtube.com/embed/NzGxAyQfFEc

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.