முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய எரிபொருள் விலை சூத்திரம்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் தற்போது பெற்று வரும் 3 சதவீத தள்ளுபடி இரத்து செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.ஏ.எஸ். டி.எஸ். ராஜகருணா (J.A.D.S.Rajakaruna) தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை (01) முதல் நடைமுறைக்கு வரும் புதிய சூத்திரத்தின்படி பணம் செலுத்தப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த  போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

 டீசலின் விலை

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “இவர்களுக்கு 3% தள்ளுபடி கிடைத்திருந்தது. 2022 மார்ச் 10 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படிதான் அது நடைமுறைப்பட்டிருந்தது. அதன்படி இப்போது செலுத்தப்படும் தொகை சட்டவிரோதமானது.

அந்த சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, டீசலின் விலை 121 ரூபாவுக்கு மேல் சென்றால், அதற்கு தொடர்புடைய 3% தொகையைத்தான் செலுத்த வேண்டும்.

நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய எரிபொருள் விலை சூத்திரம் | New Fuel Price Electricity Bill And Water Bill

பெட்ரோலுக்கு 162 ரூபா. அப்படியென்றால், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு இவர்களுக்கு தள்ளுபடியாக 3.63% கிடைக்க வேண்டும். டீசலுக்கு 4.86% கிடைக்க வேண்டும்.

ஆனால், கடந்த மாதம் 3% ஆக கணக்கிடப்பட்டால், பெட்ரோல் 92க்கு 8.52 ரூபாவும், பெட்ரோல் 95 மற்றும் சூப்பர் டீசலுக்கு அதைவிட அதிகமான தொகையும் கிடைக்கிறது.

நீதிமன்ற தடை உத்தரவு

2022 ஆம் ஆண்டில் எரிபொருள் விலை அசாதாரணமாக உயர்ந்தது. அந்த விலை உயர்வுக்குப் பிறகு 3% ஆக கணக்கிட்டால், அது 14-15 ரூபாவுக்கு சென்றது. ஆனால் 2022 சுற்றறிக்கையின்படி, டீசல் விலை 121 ரூபாவுக்கு மேல் உயர்ந்தால், 3% மட்டுமே இவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய எரிபொருள் விலை சூத்திரம் | New Fuel Price Electricity Bill And Water Bill

இது எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக நடந்தது. எங்கள் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் முறைமை சரியாக அமைக்கப்பட்டிருந்தால், 3.63%க்கு மேல் இவர்களுக்கு செல்லாது.

அதன் பிறகு இவர்கள் தொடர்ந்து இதை வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு பெற்றனர். அந்த உத்தரவு காரணமாக 3% தொடர்ந்து சென்றது. பின்னர் அந்த வழக்கு தோல்வியடைந்தது.

மீண்டும் இதை நடைமுறைப்படுத்த முயலும் போது, மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் தடை உத்தரவு பெற்று 14-15 ரூபா வரையிலான தொகையை பெற்றனர். பின்னர் இது தொடர்பாக தணிக்கை நடத்தப்பட்டது.

மின்சாரக் கட்டணம் 

தணிக்கையில், அநீதியான முறையில் 35.4 பில்லியன் ரூபா மக்களிடமிருந்து பெறப்பட்டு விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரியவந்தது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தோம். இப்போது நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்துள்ளோம்.

நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய எரிபொருள் விலை சூத்திரம் | New Fuel Price Electricity Bill And Water Bill

இந்த 3% தள்ளுபடியை நீக்கி, இவர்களின் செலவுகளுக்கு ஏற்ப ஒரு சமநிலைப்படுத்தலை உருவாக்குவது. அதை நாங்கள் அமைச்சின் செயலாளருக்கு தெரிவித்தோம்.

செயலாளர் ஒரு குழுவை நியமித்தார். அந்த குழுவின் தீர்மானம்தான் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அதில் மின்சார கட்டணம், நீர் கட்டணம் மற்றும் ஏனைய செலவுகளை கணக்கிட்டு, அதற்கு சமநிலைப்படுத்தி, இலாப பங்கையும் சேர்த்து இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதுதான் இப்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இனி மின்சார கட்டணம் அல்லது நீர் கட்டணம் உயர்ந்தால், அதற்கு தேவையான தொகை இந்த சமநிலைப்படுத்தலின்படி கிடைக்கும். இது மிகவும் நியாயமானது, மக்கள் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் எந்த பிரச்சினையும் இல்லை.” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.