பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார இணை அமைச்சர் சுனில் வட்டகல தனது
ஓட்டுநரை பூருவா (கழுதை) என்று அழைத்தமை குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று (20) வருத்தம் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னர்,
நீதிமன்ற வளாகத்தில் இருந்த துணை அமைச்சர் வட்டகல, தனது வாகனத்தை வரவழைக்கும்
போது தனது ஓட்டுநரை ‘பூருவா’ என்று அழைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
மன்னிப்புக் கோரிய அமைச்சர்
குறித்த ஓட்டுநர் மற்றும் அவரது குடும்பத்தினர் இருவருக்கும் அவமானமாக
கருதப்பட்ட இந்தக் சொல் குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த
ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், சூழ்நிலையின் போது அமைச்சருக்கு
ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒப்புக்கொண்டார்.
எனினும் பொருத்தமற்ற சொற் பிரயோகத்துக்காக பிரதி அமைச்சரின் சார்பாக தனது
வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.