இலங்கையினுடைய மக்கள் அனைவரும் தங்களுடைய அரசாங்கத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதியை தற்போதைய அரசாங்கத்துக்கு மீள நினைவுகூர வேண்டிய தேவை எழுந்துள்ளதாக பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
அண்மையில் நுகேகொடையில் இடம்பெற்ற எதிர்கட்சிகளின் பொதுப்பேரணியின் நோக்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை மீள நினைவுகூருவதே என தெரிவிக்கப்பட்டது.
எனினும், குறித்த பேரணிக்கு முன்னரும், பேரணியைத் தொடர்ந்தும் நாட்டில் நடைபெற்ற ஒரு சில சம்பவங்கள் அனைத்து மக்களும் சமம் எனும் ஜனாதிபதியின் கூற்றையே மீள நினைவுபடுத்த வேண்டியதாகியுள்ளது.
நுகேகொடை பேரணிக்கு முதலில் அரங்கேறிய திருகோணமலை சம்பவத்தை அரசியல் சூழ்ச்சி என புறக்கணித்த அரசாங்கம், இன்று தொல்லியல் திணைக்களம் எனும் பெயரில் மற்றுமொரு அரசியல் நாடகத்தை நடத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
இவை உள்ளிட்ட பல விடயங்களை ஆழமாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் இன்றைய அதிர்வு……..
https://www.youtube.com/embed/RAdBnjF-2Nk

