முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராகவே தொடர்ந்தும் வாக்களிப்போம் : கஜேந்திரகுமார் பகிரங்கம்

இந்த வரவு – செலவுத்
திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குக்குத் தீர்வுகள் ஏதும்
குறிப்பிடப்படவில்லை எனவே அதற்கு எதிராக வாக்களிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு தெரிவுகள்
கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (25) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு –
செலவுத் திட்டத்தின் 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மாறுபட்ட காலமாக தற்போதைய நிலை 

மேலும் உரையாற்றுகையில், வடக்கு, கிழக்கு மக்கள் பல
அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.

இருப்பினும் வரவு –
செலவுத் திட்டத்தில் அதற்கான தீர்வுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை.

எம்
மக்களுக்கு முரண்பாடற்ற தீர்வு கிடைக்கும் வரையில் அரசின் வரவு – செலவுத்
திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை தவிர வேறு எந்தத் தெரிவுகளும் எமக்குக்
கிடையாது.

வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராகவே தொடர்ந்தும் வாக்களிப்போம் : கஜேந்திரகுமார் பகிரங்கம் | Continue To Vote Against Budget Gajendrakumar

போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழர் பிரதேசங்களில்
ஆக்கிரமிப்புக்கள் இன்றும் தொடர்கின்றன.

சுதந்திரத்தின் பின்னரான 76 வருடங்களாக இந்த நாட்டை இரண்டு பிரதான அரசியல்
கட்சிகள் மாத்திரமே ஆட்சி செய்தன.

பெயர்கள் மாறுபட்டாலும் அந்த இரண்டு
கட்சிகளே ஆட்சி செய்து வந்துள்ளன. இந்நிலையில் தற்போதைய அரசு பதவியேற்ற
பின்னர் கடந்த 76 வருடங்களை காட்டிலும் மாறுபட்ட காலகட்டமாக தற்போதைய நிலை
இருக்கின்றது.

விசேடமாக நிதி ஒதுக்கீடு

இனப்பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசிய வாதம் தொடர்பில் அவர்களின்
கருத்துக்களை கேட்காவிட்டாலும் அவர்களின் கொள்கையை முன்னெடுப்பவர்களாக
இருக்கின்றனர்.

வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராகவே தொடர்ந்தும் வாக்களிப்போம் : கஜேந்திரகுமார் பகிரங்கம் | Continue To Vote Against Budget Gajendrakumar

ஆனால், தாம் ஆட்சிக்கு வந்தால் இனவாதத்தை முற்றாக இல்லாமல்
செய்வதாகக் கூறினர். இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணம் இனவாதமாகும். இதனை
அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு மற்றும் கிழக்கு மக்கள்
தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம்.

இந்த
மாகாணங்களுக்காக விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. வடக்கில் வீதி
அபிவிருத்திருக்காக 5000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாகக் கூறப்பட்டுள்ளது.இது போதுமானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.