அமைச்சரவை கூட்டத்தில் எலான் மஸ்க்கிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio ) கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமெரிக்கா நாட்டில் அரசு ஊழியர்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்றும் இவ்வாறு தெரிவிக்காத ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
அரங்கத்தில் பரபரப்பான சூழல்
இந்நிலையில் ட்ரம்ப் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, எலான் மஸ்க் இடையே கடும் வார்த்தை மோதல் எற்பட்டுள்ளது.
Elon Musk fought with State Secretary Marco Rubio behind closed doors, slamming him for firing “nobody” and refusing to cut costs.
Follow: @AFpost pic.twitter.com/mzmDtd1eu1
— AF Post (@AFpost) March 7, 2025
ரூபியோ, பெரிய அளவில் பணி நீக்கங்களை செய்யவில்லை என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டினார்.
இதற்கு ரூபியோ எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
இதனையடுத்து, ட்ரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, “ரூபியோ-எலான் மஸ்க் மோதல் இல்லை. அவர்கள் இருவரும் ஒரு அற்புதமான வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் இடையேயான இந்த மோதலால் அமைச்சரவை கூட்டம் நடந்த அரங்கத்தில் பரபரப்பான சூழல் நிலவியது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.