கனேடிய (Canada) ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீதான வரியை 25% முதல் 50% வரை இரட்டிப்பாக்கப் போவதாக அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப்போர் ஆழமடைந்து வருகின்றது.
கனடா, அமெரிக்க மாநிலங்களுக்கு அனுப்பும் மின்சாரத்தின் மீது 25% வரி விதித்தது.
கனேடிய பொருட்கள்
இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீதான கனேடிய பொருட்களுக்கான வரியை இரட்டிப்பாக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிலுக்கு, கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நாங்கள் பின்வாங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), அமெரிக்காவுடனான வரி விதிப்பு பிரச்சினையை பயன்படுத்தி மீண்டும் கனடா பிரதமராக முயற்சிக்கிறார் என அண்மையில் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.