புதிய இணைப்பு
கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் தலைமறைவாகியுள்ள இஷார செவ்வந்தி என்ற பெண் சந்தேக நபரைப் பற்றி துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற பிரதான சந்தேகநபருக்கு உதவி புரிந்த குற்றத்திற்கு தேடப்படும் சந்தேக நபரான பெண்ணின் மேலும் பல புகைப்படங்களை காவல்துறையினர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
புதுக்கடை நீதிமன்றத்தினுள் பெப்ரவரி 19 ஆம் தேதி கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்ற ஒரு திட்டமிட்ட கும்பலின் குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரி, காவல்துறை இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
XOS3FQY
விசாரணை
25 வயதுடைய பின்புர தேவகே இஷாரா சேவ்வந்தி என்ற சந்தேகநபர், தேசிய அடையாள அட்டை எண் 995892480V, 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகமவில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கொழும்பு குற்றப்பிரிவு தற்போது சர்ச்சைக்குரிய கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், மேற்கண்ட சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவு (CCD) இயக்குநர் – 071-8591727
CCD பொறுப்பதிகாரி – 071-8591735