சர்வதேச ஊடகமான அல்ஜசீரா நடத்திய ஹெட் டூ ஹெட் நேர்காணலில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) முன்வைத்திருந்த கருத்துக்கள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன.
இதில் இலங்கையில் மறைக்கப்பட்ட பல இரகசியங்கள் குறித்து ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பப்பட்டன.
இதன்போது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய கேள்விகளுக்கு அவர் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்திருந்தார்.
அத்தோடு சில கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியிருந்தார்.
இலங்கை அரசியலை பொறுத்தவரை சிறந்த அரசியல் புலமைவாய்ந்தவராக எல்லோராலும் பார்க்கப்பட் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திணறியதும் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்ததும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
பட்டலந்த முகாம் பற்றி அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் தற்போது இலங்கையில் மிகவும் பேசுபொருளாகியுள்ளதுடன் உண்மைகள் பற்றி ஆராய்ச்சிகள் தீவிரமாகியுள்ளன.
எனவே குறித்த நேர்காணலை லங்காசிறி தமிழில் மொழிபெயர்த்துள்ளது.
அதனை கீழுள்ள காணொளியில் காணலாம்…

