Courtesy: Subramaniyam Thevanthan
கிளிநொச்சி மாவட்டத்தின் கடற்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெருமளவு தங்கூசி வலைகள் மற்றும் கலங்கட்டி வலைகள் அவற்றின் தடிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத வலைகள் மற்றும்
அனுமதிப்பத்திரம் பெறாது, அமைக்கப்பட்ட கலங்கட்டி தொழிலில் சில கடற்றொழிலாளர்கள் ஈடுபடுவதாக கடற்றொழில் சங்கங்கள் நேற்றைய
தினம் முறைப்பாடு முன்வைத்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதற்கமைய, கிராஞ்சி பகுதியில் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தங்கூசி வலைகள் மற்றும் கலங்கட்டி வலைகள் அவற்றின் தடிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், மீட்கப்பட்ட பொருட்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை எனவும் குறித்த பொருட்களை
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில்
திணைக்கள உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.








