மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர்களை
குறிவைத்து தொலைபேசி ஊடாக மர்மநபர் ஒருவர் அநாகரிகமான வார்த்தைகளால் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று (30) அதிகாலையில்
இடம்பெற்றுள்ளதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை
வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த வைத்தியசாலை தொலைபேசி பரிவத்தனை நிலையத்துக்கு இன்று
அதிகாலை 2.00 மணிக்கு இனம் தெரியாத மர்ப நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பை
எற்படுத்தி சில வார்ட்டுக்களுக்கு தொலைபேசி அழைப்பை மாற்றுமாறு
கோரியுள்ளார்.
தொலைபேசி இலக்கங்கள்
இதையடுத்து அந்த அழைப்புக்கள் மாற்றப்பட்தையடுத்து குறித்த மர்மநபர்
அங்கு கடமையில் இருக்கின்ற வார்ட் பொறுப்பாளர் மற்றம் பெண் வைத்தியர்களின்
கையடக்க தொலைபேசி இலக்கங்களை பெற்று அவர்களுடன் தொலைபேசி ஊடாக தொடர்பை
ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் பேசியுள்ளார்.

இவ்வாறு அதிகாலை 2.00 மணி தொடக்கம் காலை 6.00 மணிவரை 13 பேருடன் தொடர்பை
ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட
நிலையில் பாதிக்கப்பட்ட வைத்தியர்கள், பொறுப்பாளர்கள் வைத்தியசாலை
பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதற்கு பின்னர், இது தொடர்பாக பொலிஸ்
நிலையத்திலும் இணைய குற்ற பிரிவிலும் முறைப்பாடுகளை செய்துள்ளதாக
வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர்களை தொலைபேசி
ஊடாக தொடர்பு ஏற்படுத்திய போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

