பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனை (deshabandu tennakoon) உடனடியாக கைது செய்ய மாத்தறை நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) விடுத்த கோரிக்கையின் பேரில் இன்று(11) இந்த திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
கைது செய்வதை இடைநிறுத்தகோரி ரிட் மனு தாக்கல்
2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்டமுன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக அவர் தேடப்படுகிறார்.
இதற்கிடையே தென்னகோன், மாத்தறை நீதிபதியின் கைது உத்தரவை இடைநிறுத்த இடைக்கால உத்தரவைக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார்.
சி.ஐ.டிக்கு வழங்கப்பட்ட பணி
முன்னதாக, பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, தென்னகோன் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து வந்தால், அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
தேசபந்து தென்னகோன் தொடர்பான ஏதேனும் தகவல்களை வழங்குமாறு காவல்துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்கும் பணி சி.ஐ.டிக்கு வழங்கப்பட்டுள்ளது.