முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் மக்கள் குறித்து விமல் வீரவன்ச முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரைக்குச் சொந்தமான காணியை அந்தப் பிரதேச மக்கள்
போலியான காணி உறுதிப்பத்திரங்களுடன் கையகப்படுத்தியுள்ளனர்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை மிகுதியாகியுள்ள
காணிகளைச் சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்திக்கொள்வதற்குத் தொடர்ந்து
போராட்டங்களில் விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று(30.03.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரை

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தையிட்டி விகாரையில் கடந்த வாரம் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றபோது ஒரு
தரப்பினர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தமிழ் மக்கள் குறித்து விமல் வீரவன்ச முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Jaffna Land Issue Thaiyitti Vikarai

இதனைத் தொடர்ந்து
அங்கு பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினர் அவ்விடத்தில்
இருந்து வெளியேறிள்ளார்கள். இதற்கான கட்டளையை இராணுவத் தளபதி
பிறப்பித்துள்ளார்.

இந்த முறையற்ற செயற்பாடுக்கு அதிருப்தி வெளிப்படுத்தி மல்வத்து பீடம்
ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளது. பிற மதத்தைச் சார்ந்த இராணுவத்
தளபதி இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று
வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத தொல்பொருள் சின்னங்கள்

புத்தசாசனம் மற்றும் கலை கலாசார அமைச்சில் பிரதான உயர் பதவிகளை வகிக்கும்
இருவர் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களல்லர். முஸ்லிம் மத விவகார
திணைக்களத்துக்கோ, இந்து மத விவகார திணைக்களத்துக்கோ அந்த மதத்தைச் சாராத பிற
மதத்தை சார்ந்தவர்களை உயர் பதவிக்கு நியமித்தால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

தமிழ் மக்கள் குறித்து விமல் வீரவன்ச முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Jaffna Land Issue Thaiyitti Vikarai

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பௌத்தம்
மற்றும் இந்து என்று மத அடிப்படையில் அடையாளப்படுத்த வேண்டாம் என்று
தொல்பொருள் திணைக்களத்துக்கு அரசு அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களில் இந்து மத தொல்பொருள் சின்னங்களுக்கு எவ்வித பாதிப்பும்
ஏற்படவில்லை. பௌத்த மத தொல்பொருள் சின்னங்கள்தான் திட்டமிட்ட வகையில்
அழிக்கப்படுகின்றன.

பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியம் என்று அரசமைப்பில்
தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, ஆட்சியாளர்கள் அதற்கமைய செயற்பட
வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.