முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்த பணம் : வெளியான அறிவிப்பு

2024 நவம்பர் மாதத்தில் வெள்ள நிலைமை ஏற்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

கமநலக் காப்புறுதிச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 11 ஆம் திகதியிலிருந்து 53,511 விவசாயிகளுக்கு 61,071 ஏக்கர் விவசாய நிலங்களுக்காக 952 மில்லியன் ரூபாய் நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்பட்டுள்ளது.

பயிர் பாதிப்பு நிவாரண நிதி

வெள்ளத்தினால் பாரிய அளவில் விவசாயம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை (Trincomalee), முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் (Jaffna) , குருநாகல் மற்றும் வவுனியா (Vavuniya) ஆகிய மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டது.

அதன்படி அந்த மாவட்டங்களில் பயிர் பாதிப்பு நிவாரண நிதியை விரைவாக விடுவிடுவிப்பதற்காக கமநல சேவைகள் நிலையங்களின் சிபாரிசுகள் கருத்திற் கொள்ளப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை வழங்கி செயல்பட்டு, அந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதாக கமநலக் காப்புறுதிச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்த பணம் : வெளியான அறிவிப்பு | 952 Million Rupees Credited To Farmers Accounts

இந்த செயற்பாடுகளின் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் மற்றும் வெளிப்படையுடன் மேற்கொள்வது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

அதனால் கமநல சேவை மத்திய நிலையங்களின் சிபாரிசு செய்யப்பட்ட விவசாய பாதிப்பிற்காக மாத்திரம் நிவாரணம் வழங்கப்பட்டது. 

அவ்வாறு விவசாயிகளை அடையாளம் காணும் பிரச்சினை, தேசிய அடையாள அட்டை இலக்கங்களில் உள்ள பிரச்சினை , வங்கிக் கணக்கு விபரங்கள் பிழையானவை, மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசு முழுமை பெறாமை, பாதிப்பு அறிக்கையிடல் முறையாக மேற்கொள்ளப்படாமை உட்பட சிறு சிறு குறைபாடுகளுடன் காணப்பட்ட ஆவணங்களுக்காக நிவாரணம் வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may like this

https://www.youtube.com/embed/Xi_pvRF-H8s

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.