விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. பாக்கியலட்சுமி உள்ளிட்ட மற்ற தொடர்கள் அதன் ரேட்டிங்கை தொட முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது.
இந்த சீரியலில் பாட்டி ரோலில் நடித்து வருபவர் ரேவதி. சிறகடிக்க ஆசையில் அதிகம் பவர்புல் ஆன ரோல் அவருடையது தான். வில்லி மாமியார் விஜயாவே அவரை பார்த்தால் அடங்கி போவார். அப்படி ஒரு ரோல்.
படங்களில்
தற்போது ரேவதி பாட்டிக்கு சினிமாவிலும் நல்ல வாய்ப்புகள் குவிகிறதாம். ஆனால் சினிமா ஒன்றும் அவருக்கு புதிதல்ல. சினிமாவில் ஒருகாலத்தில் பிசியாக நடித்து வந்திருக்கிறார்.
தனிப்பிறவி என்கிற படத்தில் எம்.ஜி.ஆருக்கு தங்கையாக அவர் நடித்து இருக்கிறாராம்.
ஒருபடத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்து இருக்கிறாராம்.