முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விமான பணிப்பெண்களிடம் பாலியல் சீண்டல்: அதிரடியாக கைது செய்யப்பட்ட பயணி

சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகபர் கட்டுநாயக்க விமான நிலையப் காவல்துறையினரால் இன்று (16) கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்போது, கொழும்பு அத்துருகிரிய பகுதியில் வசிக்கும் 38 வயதுடையவர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உடன் செயற்பட்ட பணிப்பெண்கள்

சந்தேகநபர் நேற்றையதினம் (15) பிற்பகல் 10 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-309 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

விமான பணிப்பெண்களிடம் பாலியல் சீண்டல்: அதிரடியாக கைது செய்யப்பட்ட பயணி | Man Arrested Sexually Assaulting Flight Attendants

இந்த நிலையில், அதிக மது போதையில் இருந்த சந்தேகநபரான பயணி விமானத்தில் பணிபுரிந்த இரண்டு விமானப் பணிப்பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக இந்த சம்பவத்தை விமானத்தின் விமானியிடம் தெரிவித்துள்ளதுடன், அவர் அதனை கட்டுநாயக்க விமான நிலைய பணிமனைக்கு அறிவத்துள்ளார்.

கைது நடவடிக்கை

அதன்படி, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும், சிறிலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கைது செய்து கட்டுநாயக்க காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விமான பணிப்பெண்களிடம் பாலியல் சீண்டல்: அதிரடியாக கைது செய்யப்பட்ட பயணி | Man Arrested Sexually Assaulting Flight Attendants

மேலும், சம்வத்திற்கு முகங்கொடுத்த விமான பணிக்பெண்களிடம், ​​கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதுடன், சந்தேகநபரான பயணியை நீர்கொழும்பு மருத்துவ பரிசோதகரிடம் முற்படுத்தி அவர் அதிக மதுபோதையில் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் இலங்கை வான்வெளியில் நடந்ததால், இன்று அவரை கொழும்பு எண் 01 நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.