யாழ்ப்பாணத்தில் (Jaffna) தவறான முடிவெடுத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ்
பிருந்தா (வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் ஆறு மாதங்கள் கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண விசாரணை
கணவனுடன் ஏற்பட்ட
முரண்பாடு காரணமாக கடந்த 2 ஆம் மாதம் 20 ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.
இந்நிலையில் அயலவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சேர்ப்பித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றுமுன்தினம்
உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டுள்ளார்.
மேலும் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளது.
செய்திகள் – பு.கஜிந்தன்