உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
யாழ்பாணத்தில் இன்றைய தினம் (20.03.2025) நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையிலான குழு வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் சுயேட்சை குழுவாக இத் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
இதற்கமையய யாழிலுள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கு முதற்கட்டமாக கட்டுப்பணத்தை கடந்த 17ஆம் திகதி செலுத்தியுள்ளனர்.
இவ்வாறு அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணத்தை செலுத்தி சகல இடங்களிலும் தேர்தலில் இராமநாதன் அர்ச்சுனா போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/Mk0HBbULVu0