முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கேப்பாபிலவு மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு கோரி மனு கையளிப்பு

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை
விடுவிக்குமாறு கோரி கிராம மக்கள் இன்று (11) மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர்.

 தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி கிராம மக்கள்
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடமும், மற்றும் உயர் அதிகாரிகளிடமும்
கடந்த வருடம் மனுவொன்றினை கையளித்திருந்தனர்.

அதற்கு தீர்வுகள் கிடைக்க
பெறாத நிலையில்
நேற்றையதினம் (10.04.2025) கேப்பாபிலவு மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு
சென்று ஜனாதிபதியினுடைய சிரேஸ்ட உதவி செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய போது
தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆவணங்கள் எம்மிடம் கிடைக்கவில்லை என
கூறியிருந்தனர்.

மனு கையளிப்பு

இதனையடுத்தே இன்றையதினம் கேப்பாபிலவு மக்கள் முல்லைத்தீவு
மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் ஐனாதிபதி செயலகத்தில் கூறப்பட்ட
விடயங்களை கூறி அரச அதிபரிடம் புதிய மனுவொன்றை கையளித்துள்ளனர்.

கேப்பாபிலவு மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு கோரி மனு கையளிப்பு | Land Issue Of The Kappapilau Magajar Handed Over

இதன்போது முல்லை மாவட்ட அரச அதிபர் கேப்பாபிலவு காணி தொடர்பாக ஜனாதிபதி
செயலகத்திற்கு தம்மால் அனுப்பி வைக்கப்பட்ட மனுவையும் அதற்கான பதில்
கடிதத்தையும் கேப்பாபிலவு மக்களுக்கு காண்பித்து அது தொடர்பாக
தெளிவுபடுத்தியிருந்தார்.

கேப்பாப்பிலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும்
பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் , ஆலயங்கள் , தேவாலயம், பொதுநோக்கு மண்டபம்
உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே
இருந்து வருகின்றது.

தொடர் போராட்டம்

குறிப்பாக மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் பல குறித்த
காணியிலேயே காணப்படுகின்றன. 62 நபர்களின் 171 ஏக்கர் காணிகள் தற்போது
விடுவிக்கப்படாது இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கேப்பாபிலவு மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு கோரி மனு கையளிப்பு | Land Issue Of The Kappapilau Magajar Handed Over

பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும்
பல போராட்டங்கள் செய்தும் இதுவரை தீர்வு இல்லை என்றும் தமது காணிகளை விரைவில்
விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மீண்டும் தொடர்
போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்திருந்த நிலையிலே இன்று மனு கையளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பிற்கு வருகைதர இருப்பதனால் அவரிடமும்
கேப்பாபிலவு மக்கள் மனுவொன்றினை கையளிக்க இருப்பதும் குறிப்பிடதக்கது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.